ஆப்நகரம்

ஆன்லைன் ரம்மி தடை; மத்திய அரசுக்கு சரத்குமார் அவசர கோரிக்கை..!

நடிகரும் , அரசியல் கட்சி தலைவருமான சரத்குமார் மத்திய அரசுக்கு அவசர கோரிக்கையை வைத்துள்ளார்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 17 Apr 2023, 5:04 pm
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடி பணமிழந்து, கடனாளியாகி சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். எனவே மனித உயிர்களை காவு வாங்கும் இதுபோன்ற செயலிகளை முற்றிலுமாக தடை செய்யும் மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
Samayam Tamil sarathkumar


இந்நிலையில், நீண்ட நாட்கள் இழுத்தடிப்புக்கு பிறகு இரண்டாவது முறையாக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தந்தார். மேலும், அந்த மசோதா முந்தைய மசோதாவில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்து வந்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனருமான சரத்குமார் மத்திய அரசுக்கு அவசர கோரிக்கையை வைத்துள்ளார்.

அதில், சூதாட்டம் தடை என்று சொல்லும்போது அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். முக்கியமாக இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் ஆபாச இணையதளங்களையும் இந்தியாவில் தடை செய்ய வேண்டும்.அந்த வகையில், பார்னோகிராஃபி உள்ளிட்ட செயலிகள் இணையதளங்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக ஆன்லைன் ரம்மி விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தபோது நடிகர் சரத்குமாரை நோக்கி பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆளுநர் ரவியை ''ரம்மி ரவி'' என்று நெட்டிசன்கள் விமர்சித்ததை போல சரத்குமாரை ''ரம்மி நாயகன்'' என்று விமர்சித்தனர். இந்த நிலையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சரத்குமாரிடம் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் ஏன் நடிக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ஆன்லைன் ரம்மியை ஏன் தடை செய்யவில்லை என்று அரசிடம் கேளுங்கள் பிறகு என்னிடம் வாருங்கள். ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல, ஆபாச பட இணையதளம் மற்றும் மதுவையும் தடை செய்யப்பட வேண்டும். நீங்கள் தடை செய்தால் நான் ஏன் நடிக்க போகிறேன் என கேள்வி எழுப்பிய சரத்குமார் கிரிக்கெட் சூதாட்டத்தில்கூட தோனி, விராட் கோலி நடிக்கிறார்கள். இதையெல்லாம் தடை செய்தால் யார் நடிக்க போகிறார்கள் என இவ்வாறு விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி