ஆப்நகரம்

எனக்கும் ஒரு தங்கை இருந்திருக்கிறாள்; அனிதாவின் சகோதரரிடம் உருகிய விஜய்

ஒரு தங்கையை இழப்பது எவ்வளவு பெரிய வேதனை என்பது தனக்குப் புரியும் என்று நடிகர் விஜய் அனிதாவின் சகோதரரிடம் மனம் .உருகி பேசியிருக்கிறார்

TNN 12 Oct 2017, 2:19 pm
ஒரு தங்கையை இழப்பது எவ்வளவு பெரிய வேதனை என்பது தனக்குப் புரியும் என்று நடிகர் விஜய் அனிதாவின் சகோதரரிடம் மனம் .உருகி பேசியிருக்கிறார்
Samayam Tamil actor vjiay condolence to neet anitha
எனக்கும் ஒரு தங்கை இருந்திருக்கிறாள்; அனிதாவின் சகோதரரிடம் உருகிய விஜய்


நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விஜய்யும் அனிதாவின் வீட்டிற்கு சென்று தன்னுடைய இரங்கலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அனிதாவின் சகோதரர் மணிரத்னத்திடம், தனியார் இணையதளம் சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது, நடிகர் விஜய் தன்னிடம் பேசியதை மணிரத்னம் பகரிந்து கொண்டார். அதில், ‘நீங்கள் உங்களுடைய அன்பு சகோதரி அனிதாவை இழந்து கஷ்டபடும் வேதனை எனக்கு நன்றாக புரியும் என்றும், எனக்கும் ஒரு தங்கை இருந்தால். ஆனால், இப்போது அவள் இல்லை என்று, மனம் உருகி பேசியுள்ளார்.



நடிகர் விஜய்யின் சகோதரி வித்யா சந்திரசேகர், தன்னுடைய இரண்டு வயதில் காலமானார் என்பதும், இதன் காரணமாகத் தான், அவர் சகோதரி பாசப் படங்களில் அதிகமாக நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி