ஆப்நகரம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பிரபல நடிகை

பிரபல மாடலும் நடிகையுமான மேஹ்னா படேல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

TNN 2 Aug 2016, 11:35 am
குஜராத்: பிரபல மாடலும் நடிகையுமான மேஹ்னா படேல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் மாடலும், நடிகையுமான மேஹ்னா படேல். டிவி சீரியல்களிலும், அரை நிர்வாணமாகவும் பாலிவுட்டில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், காதலில் விழுந்தேன் படத்தில் வரும் நாக்க முக்கா பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil actress meghna patel joins ncp
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பிரபல நடிகை


கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பா.ஜ.க கட்சி சின்னத்தை தனது உடம்பில் அமைத்துக்கொண்டும், அவரது புகைப்படத்துடனும் கோஷமிட்டார்.

ஹிந்தி, போஜ்பூரி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட மேஹ்னா, தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (என்.சி.பி) இணைந்துள்ளார் என்று மூத்த என்.சி.பி. தலைவர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.

வரும், 2017ம் ஆண்டு நடக்கயிருக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் வதோதராவின் என்.சி.பி. கட்சி சார்பில் போட்டியிடயிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி