ஆப்நகரம்

திமுக இதுக்கு தான் அப்படி செய்யுது: விஜய பாஸ்கருக்கு ஆதரவாக உதயகுமார்

எதிர்கட்சியே இருக்க கூடாது என திமுக நினைப்பதாக ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

Samayam Tamil 24 Jul 2021, 6:50 am
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுக அரசை விமர்சித்துள்ளார்.
Samayam Tamil rb udhayakumar


மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருமங்கலம் ஒன்றியக் கிளைக் கூட்டம் டி.குன்னத்தூரில் நடைபெற்றது. இதில் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்
ஓபிஎஸ்ஸுக்கு இப்படியொரு செக்கா? விடாது துரத்தும் பிரச்சினை!
அப்போது பேசிய அவர், “அதிமுகவில் விரைவில் உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஜனநாயக நெறிமுறைப்படி நாம் தேர்தலை நடத்த வேண்டும்” என்றார்.

ரெய்டு விவகாரம் குறித்து பேசிய அவர், “போக்குவரத்து அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பாகச் செயல்பட்டார். அத்துறையை முன்மாதிரி துறையாக மாற்ற பாடுபட்டார். தொழிலாளர்கள் பிரச்சினையை எளிதாகக் கையாண்டார்.
ஓபிஎஸ், இபிஎஸ்ஸை கவர் பண்ணிய அண்ணாமலை: காரணம் என்ன?
திமுக அரசுக்கு பல்வேறு சவால்கள் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எம்.ஆர்.விஜய பாஸ்கர் மீதான ரெய்டு நடவடிக்கையை அதிமுக மீது சேற்றை வாரி இறைக்க திமுக முயற்சிக்கிறது என்பதாகத்தான் மக்கள் பார்ப்பார்கள். எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்று திமுக நினைக்கிறது” என்று கூறினார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற ரெய்டு என்பது தொடக்கம் தான் என்றும் இனி பல மாஜிக்கள் வீடுகளில் ரெய்டுகள் நடைபெறும் என்றும் ஒருசாரார் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி