ஆப்நகரம்

முதல்வர் பெயரைச் சொல்லி ரூ.7 லட்சம் அபேஸ்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லி வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 7 லட்சம் மோசடி நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 17 Mar 2017, 1:04 pm
எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து அவரது பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Samayam Tamil admk functionaries cheating using tamilnadu chief minister edappadi palaniswami
முதல்வர் பெயரைச் சொல்லி ரூ.7 லட்சம் அபேஸ்!


பூந்தமல்லி நகராட்சி ஆணையராக இருந்தவர் சுரேந்திரஷா. சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மீண்டும் பூந்தமல்லி நகராட்சிக்கே பணிக்கு வர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக பூந்தமல்லி அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாவித் அகமது ஆகியோரிடம் முறையிட்டுள்ளார். இவர்கள் மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் சரவணனை சந்தித்துள்ளார்.

சுரேந்திரஷாவுக்கு பூந்தமல்லி நகராட்சியில் மீண்டும் பணி வாங்கி கொடுப்பதற்கு சரவணனிடம் ரூ.10 லட்சம் தருவதாக கூறி ரூ 7 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சுரேந்திரஷாவுக்கு பணி வாங்கி தரவில்லை. இதனால் ஏமாந்து போன சுரேந்திரஷா காவல்துறையிடம் புகார் கொடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பூந்தமல்லி, ஆவடி, திருவேற்காடு ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிக்கு ரூ.50 கோடியை முதல்வர் லஞ்சமாக பெற்றுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி