ஆப்நகரம்

அமைச்சர்கள் பதவிநீக்கத்தில் உரிய விளக்கம் தேவை: கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்

அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவது ஏன் என்று தமிழக மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும், என திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

TNN 19 Mar 2016, 9:49 pm
அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவது ஏன் என்று தமிழக மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும், என திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
Samayam Tamil admk govt should explain on ministers reshuffle kanimozhi mp
அமைச்சர்கள் பதவிநீக்கத்தில் உரிய விளக்கம் தேவை: கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்


இதுதொடர்பாக, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகால, அதிமுக., ஆட்சிக்காலத்தில் தமிழக அமைச்சர்கள் பல முறை மாற்றப்பட்டனர். ஆனால், அதற்கான விளக்கத்தை இதுவரை தமிழக அரசு அளிக்கவில்லை. ஆட்சிக்காலம் முடிய உள்ள நிலையில், தற்போது அமைச்சர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி, அதிமுக தலைமை உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும், அமைச்சர்கள் செய்யும் தவறுகள் தனக்கு தெரியாமல் நடப்பது போல, முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுவது ஏற்புடையதல்ல.

இவ்வாறு கனிமொழி எம்.பி., கூறினார்.

அடுத்த செய்தி