ஆப்நகரம்

”தமிழக முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி”:கடந்து வந்த பாதை.!

தமிழக முதல்வராக இன்று மாலை பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி கடந்து வந்த பாதையை இந்த செய்தியில் பார்க்கலாம்...!

TNN 16 Feb 2017, 12:49 pm
தமிழக முதல்வராக இன்று மாலை பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி கடந்து வந்த பாதையை இந்த செய்தியில் பார்க்கலாம்...!
Samayam Tamil admk minister edapati palanisamys life history
”தமிழக முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி”:கடந்து வந்த பாதை.!


சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியிலுள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி,1980-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்த போது,ஜெயலலிதா அணியில் இணைந்தார் .அன்று முதல் இன்று வரை ஜெயலலிதாவுக்கு விசுவாசமான நபராக தொடர்ந்து வருகிறார்.

1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அணி சார்பாக எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.மீண்டும் 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.

அதிமுக தமிழகத்தில் ஆட்சியமைத்த 1991,2011,2016 ஆகிய மூன்று முறையும் எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கிடைப்பட்ட காலத்தில் 1998-ஆம் ஆண்டு திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்று எம்.பியானார்.

சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் மிகப்பெரிய சக்தியாக கருதப்படும் பழனிச்சாமி,2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அம்மாவட்டத்தில் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தவர்.

தற்போது கொங்கு மண்டலத்தில் அதிமுக அதிக எம்.எல்.ஏக்களை கொண்டிருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவர்.

தற்போது பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி,சசிகலாவால் தமிழக முதல்வர் பதவியையும் அடைய இருக்கிறார்.

ADMK Minister Edapati Palanisamy's life history

அடுத்த செய்தி