ஆப்நகரம்

அதிமுக தொண்டர்களுக்கு மது, பிரியாணி வழங்கிய எம்.எல்.ஏ.கனகராஜ்

கோவையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தொண்டர்களுக்கு எம்.எல்.ஏ கனகராஜ் மது, பிரியாணி வழங்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளதாக கூறப்பட்கிறது.

Samayam Tamil 4 Dec 2017, 5:53 am
கோவையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தொண்டர்களுக்கு எம்.எல்.ஏ கனகராஜ் மது, பிரியாணி வழங்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளதாக கூறப்பட்கிறது.
Samayam Tamil admk mla kanakaraj video leaked in social media
அதிமுக தொண்டர்களுக்கு மது, பிரியாணி வழங்கிய எம்.எல்.ஏ.கனகராஜ்


கோவையில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. பேனர் வைத்ததால், ஏற்பட்ட ரகு மரணம், ஒகி புயல் பாதிப்பு, ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் என்று பல சர்ச்சைகளுக்கும் மத்தியில் நேற்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாக நடந்தது. இதற்காக கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் பல ஆயிரணக்கான தொண்டர்கள், மது, பிரியாணி மற்றும் பணத்திற்காக அழைத்து வரப்பட்டனர். இதற்கு முன்னதாக விழா முன்னேற்பாடுகள் பணிகள் கோவை சுல்தான்பேட்டையில் நடந்தது.

தொண்டர்களை அழைத்து வரும் அரசு, தனியார் மற்றும் பள்ளி, கல்லூரிகளின் டிரைவர்கள், கிளீனர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று காலையிலேயே எம்.எல்.ஏ கனகராஜ் வீட்டில் அனைவரும் குவிந்தனர். அப்போது அவர்களுக்கு மது பாட்டில், பிரியாணி, தண்ணீர் பாக்கெட் மற்றும் கட்சி கொடிகள் என்று அனைத்தும் அனைவருக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்டது. மேலும், டிரைவர்கள் மற்றும் கிளீனர்களுக்கு ரூ.1000 வீதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மது, பிரியாணி மற்றும் பணம் ஆகியவை வழங்கிய காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எம்.எல்.ஏவின் உதவியாளரிடம் கேட்டபோது இது அத்தனையும் வதந்தி தான். இதில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி