ஆப்நகரம்

தமிழக முதலமைச்சர் திடீர் மாற்றம்; எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா செய்த அதிரடியை பாருங்க!

அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பங்கேற்ற கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை எழுந்துள்ளது.

Samayam Tamil 11 Jun 2019, 7:00 pm
மதுரை திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கலந்து கொண்ட கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர் ஒன்றில், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் பெயர்கள் மாற்றி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ADMK Poster


திருப்பரங்குன்றம் ஒன்றிய அதிமுக சார்பில், உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாக நேற்று நிர்வாகிகள் கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் நடைபெற்றது. இதற்காக அங்கு பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அதில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த பேனரை செய்தியாளர்கள் படம் பிடித்ததை தொடர்ந்து, காகிதத்தை பேனரில் ஒட்டி, அதிமுகவினர் மறைத்தனர்.

இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி, பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. முன்னதாக தேனியில் உள்ள கோவில் ஒன்றில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத் குமார் என போஸ்டர் அடிக்கப்பட்டது. இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, தற்போது ஓ.பன்னீர்செல்வம் தான் முதலமைச்சர் என்று குறிப்பிடப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி