ஆப்நகரம்

சட்டத்தின் உதவியுடன் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி: ராமதாஸ்!

அதிமுக ஆட்சி சட்டத்தின் உதவியுடன் அகற்றப்படுவது உறுதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

TNN 18 Sep 2017, 2:59 pm
சென்னை: அதிமுக ஆட்சி சட்டத்தின் உதவியுடன் அகற்றப்படுவது உறுதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil admk rule will be removed says ramadoss
சட்டத்தின் உதவியுடன் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி: ராமதாஸ்!


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கட்சித் தாவல் தடை சட்டத்தின் எந்த பிரிவும் பொருந்தாத ஒரு செயலுக்காக, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜனநாயகப் படுகொலை கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் இத்தகைய ஜனநாயகப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

குதிரைபேரம் மூலம் உறுப்பினர்களை வளைப்பதற்கு வசதியாக இந்த விஷயத்தில் ஆளுநர் காலதாமதம் செய்து வந்தார்.

ஆளுநர் மட்டும் மிகவும் நேர்மையாக செயல்பட்டிருந்தால் இந்த ஜனநாயகப் படுகொலை நடத்திருக்காது.

பதவியில் தொடர்வதற்காக எந்த பாதகத்தையும் செய்யத் துணிந்து விட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

ஆளுநரும், பேரவைத் தலைவரும் முட்டுக்கொடுத்தாலும் கூட சட்டத்தின் உதவியுடன் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி.

ADMK rule will be removed says Ramadoss.

அடுத்த செய்தி