ஆப்நகரம்

அதிமுக தமிழகத்தின் உரிமைகளை ஒரு போதும் விட்டுகொடுக்காது: அமைச்சர் ஆர். காமராஜ்!

அதிமுக தமிழகத்தின் உரிமைகளை ஒரு போதும் விட்டுகொடுக்காது என தமிழக உணவு மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறியுள்ளார்.

Samayam Tamil 28 Apr 2019, 4:42 pm
அதிமுக தமிழகத்தின் உரிமைகளை ஒரு போதும் விட்டுகொடுக்காது என தமிழக உணவு மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறியுள்ளார்.
Samayam Tamil அதிமுக தமிழகத்தின் உரிமைகளை ஒரு போதும் விட்டுகொடுக்காது: அமைச்சர் ஆர். காமராஜ்!
அதிமுக தமிழகத்தின் உரிமைகளை ஒரு போதும் விட்டுகொடுக்காது: அமைச்சர் ஆர். காமராஜ்!


ஓட்டபிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை வெற்றிபெற செய்யும் வகையில் பாரதிய ஜனதா, புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கம்பூர் செ.ராஜீ, சேவூர் ராமசந்திரன், ராஜலெட்சுமி, மணிகண்டன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் இத்தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரும், தமிழக உணவு மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல திட்டங்களை அவரது வழியில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதன் காரணமாக தமிழகத்தில் வரும் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள நான்கு தொகுதி சட்டபேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்.

அஇஅதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள். ஒரு போதும் வெற்றி பெற முடியாது. அதிமுக இந்த தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் சந்திக்க தயாராக உள்ளோம். அதிமுக வெற்றி பெற்றால் இந்த தொகுதியின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்தையும் செய்வோம் என்பதை உறுதி செய்வோம். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் 75 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெறுவார். முன்னதாக தேர்தல் காரியாலயத்தை அவர் திறந்து வைத்தார்.

அடுத்த செய்தி