ஆப்நகரம்

வெளுத்து வாங்க போகும் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அடுத்த இரு தினங்களுக்கான மழை பற்றிய முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Dec 2020, 1:33 pm
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது.
Samayam Tamil tn rain update


குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிகிறதா? ஸ்டாலின் போடும் கணக்கு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கைலாசாவுக்கு இலவச விசா கொடுக்கும் நித்தி: உஷார் மக்களே!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணம்பூண்டி (விழுப்புரம்) 17, ஆனந்தபுரம் (விழுப்புரம்), கேதார் (விழுப்புரம்), முகையூர் (விழுப்புரம் ), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி) தலா 16, புதுச்சேரி 15, மயிலம் (விழுப்புரம்) 13, உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 12, கடலூர் (கடலூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) தலா 10, விழுப்புரம் (விழுப்புரம்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), சேத்தியாத்தோப்பு (கடலூர்) தலா 8,

'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில் இணைந்த சந்தோஷ் நாராயணன்!

வேப்பூர் (கடலூர்), மரக்காணம் (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்), புவனகிரி (கடலூர்), வானுர் (விழுப்புரம்) தலா 7, காட்டுமன்னார்கோயில் (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), வீரகனூர் (சேலம்), பெரம்பலூர் (பெரம்பலூர்), பெலந்தூரை (கடலூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்) தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி