ஆப்நகரம்

சாவிலும் இணைபிரியாத தம்பதி- சோகத்தில் மூழ்கிய எழுமலை கிராமம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை கிராமத்தில் சதாசிவம்- சரோஜா தம்பதியினர் வசித்து வந்தனர். இருவரும் 50 ஆண்டுகளாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். இதனிடையே கணவர் சதாசிவம் உயிரிழந்த சோகத்தில், மனைவி சரோஜாவும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!

Samayam Tamil 5 Sep 2019, 3:14 pm
உசிலம்பட்டி அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil சாவிலும் இணைபிரியாத தம்பதி- சோகத்தில் மூழ்கிய எழுமலை கிராமம்!
சாவிலும் இணைபிரியாத தம்பதி- சோகத்தில் மூழ்கிய எழுமலை கிராமம்!


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். பொது நூலகத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரோஜா. இந்த தம்பதிக்கு சுதாகர், பாஸ்கர், பிரபாகர் என்று 3 மகன்கள் உள்ளனர்.

மூவரும் வெளியூர்களில் பணிபுரிகின்றனர். இதனால் சதாசிவம்- சரோஜா தம்பதியினர் எழுமலையில் உள்ள சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக சதாசிவம் நேற்று உயிரிழந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்: தெலங்கானா ஆளுநராக பதவியேற்க ரெடி; அதுல தமிழிசைக்கு இப்படியொரு சிக்கல்!

இதையடுத்து வெளியூர்களில் இருந்த மூன்று மகன்களும், சொந்த ஊருக்கு திரும்பி, தந்தையின் உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். கணவர் இழந்த சோகம் தாங்காமல் சரோஜா இரவு முழுவதும் அழுது தவித்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சரோஜாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

ஒரே நேரத்தில் தந்தையும், தாயும் பறிகொடுத்து மூன்று மகன்களும் கதறியழுத சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது.

சிபிஐ அடுத்து அமலாக்கத்துறை வசம் ப.சிதம்பரம்- ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுப்பு!

கணவர் இறந்ததும், தானும் அவருடன் சென்றுவிடுவேன் என சரோஜா அடிக்கடி கூறி வந்துள்ளார். அதன்படியே 50 ஆண்டுகளாக இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதி, மரணத்திலும் இணைபிரியாமல் சென்ற சம்பவம், எழுமலை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குரங்கணி வனப்பகுதியில் மீண்டும் மலையேற்றம் செல்ல அனுமதி!

அடுத்த செய்தி