ஆப்நகரம்

6 மாசம் ஆச்சு; இப்படியொரு சூப்பர் நியூஸ்; தமிழக மக்கள் செம ஹேப்பி!

வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 17 Oct 2020, 3:16 pm
கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆம்னி பேருந்துகள் சேவையும் நிறுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து ஜூன் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை தளர்வுகள் குறித்த அறிவிப்பின் போது பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் திடீரென வைரஸ் தொற்று அதிகரித்ததைக் கண்டு போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. பின்னர் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்த பிறகு அரசு பேருந்துகள் சேவை தொடங்கியது.
Samayam Tamil TN Omni Service


கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி முதல் வெளி மாவட்டங்களுக்கும் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதன்மூலம் அரசு விரைவு பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்தன. தற்போது வைரஸ் தொற்று பெரிய அச்சுறுத்தலாக இல்லை. எனவே தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதாவது 50 சதவீத பயணிகள் மட்டும் ஏற்றிச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தனர். அதில், பேருந்துகள் ஓடாத மாதங்களில் கட்ட வேண்டிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கும்.

மின் உற்பத்திக்கு திடீர் தடை, மின் தட்டுப்பாடு வருமா?

இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த சூழலில் நேற்று (அக்டோபர் 16) முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்திருந்தார். மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படும்.

பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறினார். அதன்படி, தமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு பிறகு நேற்று ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 500 பேருந்துகள் மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி