ஆப்நகரம்

போலீசார் தடியடி: பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

TNN 11 Apr 2017, 7:28 pm
கோவை: டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil after lathi charge public hunger strike
போலீசார் தடியடி: பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்


கோவை சாமளாபுரத்தில் ஊருக்குள் அமைக்கப்படவிருந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி, அப்பகுதி எம்எல்ஏ கனகராஜ் மற்றும் ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை முதல் நடைபெற்று வந்த பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரிகள் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடை மூடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததாக தெரிகிறது. ஆனாலும், அங்கிருந்த கலைந்து செல்லாமல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பெண்கள் என்றும் பாராமல் போலீசார் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலில், ஒருவரது மண்டை உடைந்தது. மேலும், மூவர் காயமடைந்தனர்.

இந்நிலையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்களை அடித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கயாமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் திட்டவட்டம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
After lathi charge; public hunger strike

அடுத்த செய்தி