ஆப்நகரம்

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு?

அனல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளதால், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளது.

Samayam Tamil 21 May 2018, 5:11 am
அனல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளதால், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளது.
Samayam Tamil power cut


தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கடுமையாக மின்வெட்டு பாதிப்பு ஏற்பட்டது. இதன் உச்சக்கட்டமாக சென்னை தவிர மற்ற இடங்களில் ஒரு நாளைக்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே மின்விநியோகம் இருந்தது. இவ்வாறு சில மாதங்கள் அவதிக்குப் பிறகு படிப்படியாக மின்வெட்டு சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அனல்மின்நிலையம் மற்றும் காற்றாலை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மின்உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், தமிழகத்துக்குத் தேவையான மின்சாரம் இல்லை என்றும் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகலாம் என்றும் செய்திகள் வந்துள்ளன. கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிப்படைந்துள்ள நிலையில், அதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மாற்றுவழி விரும்புவோர், சூரிய மின்தகட்டினை 30% மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். இதனால் வருடத்துக்கு 14,700 ரூபாய் வரையில் மிச்சப்படுத்தலாம் என்பது கூடுதல் தகவல். மானிய விலையில், சூரிய மின்கூரை அமைக்க விரும்புவோர் http://tedaprojects.in/ என்ற தமிழ்நாடு மின்உற்பத்திக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

அடுத்த செய்தி