ஆப்நகரம்

அக்னிநட்சத்திரம் ஆரம்பம்: சுட்டெரிக்கும் வெயிலில் வாடிப்போகும் மக்கள்!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குகிறது.

Samayam Tamil 4 May 2021, 7:24 am
கொரோனா ஒரு பக்கம் மிரட்டுகிறது என்றால் கோடை வெயில் ஒருபக்கம் வாட்டுகிறது. வெயிலை குறைக்க கோடை மழை வராதா என வானத்தை பார்த்திருந்தவர்கள் இன்னும் சுமார் ஒரு மாதம் அதிக வெப்பத்தைத்தான் அனுபவிக்க வேண்டும்.
Samayam Tamil agni nakshathiram


தமிழகத்தில் இன்று (மே 4) முதல் இருபத்தைந்து நாள்களுக்கு அக்னி நட்ச்சத்திரம் சுட்டெரிக்க உள்ளது. இதனால் வெப்பநிலை பல இடங்களில் வழக்கத்துக்கு மாறாக அதிகரிக்கும்.
மே 6ஆம் தேதி முதல் ஊரடங்கு: தமிழகத்தில் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!
கோடை வெயிலைப் போக்க தென் மாவட்டங்களில் அவ்வப்போது பல இடங்களில் மழை பெய்துவந்தது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் தான் கோடைமழையை பார்க்காமல் வெயிலில் வாடும் நிலை ஏற்பட்டது.

இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியிருப்பதால் வெயில் நேரத்தில் வெளியில் நடமாடுவதை குறைக்க வேண்டும். நீர்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியலாம்.
நாடு முழுவதும் முழு ஊரடங்கு போட சொல்லி பரிந்துரை!
மே 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பலசரக்கு, காய்கறிக்கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் கொரோனாவிலிருந்தும் கோடை வெயிலில் இருந்தும் தங்களை தற்காத்துக் கொள்ள வீட்டிலேயே இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அடுத்த செய்தி