ஆப்நகரம்

அரசுப் பேருந்துகளில் விளைபொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி!

விவசாய விளைபொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Samayam Tamil 22 Jul 2018, 11:36 am
சென்னை: விவசாய விளைபொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Samayam Tamil TN Govt


தொடர் எரிபொருள் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, 3ஆம் நபர் காப்பீட்டுத் தொகை உயர்வு உள்ளிட்டவை காரணமாக லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

காய்கறிகள் விலை உயரத் தொடங்கியுள்ளன. நாடு முழுவதும் ரூ.15,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் உட்பட, 85 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

லாரி ஸ்டிரைக் காரணமாக, விவசாய விளைபொருட்கள் தேங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுப் பேருந்துகளில் இலவசமாக விளைபொருட்களை ஏற்றிச் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதேசமயம் பிற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், அரசுப் பேருந்துகளில் ஏற்றிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது என்று போக்குவரத்து கழக மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Agri products will be free to take in Govt Buses says Tamilnadu Govt.

அடுத்த செய்தி