ஆப்நகரம்

ஜெயலலிதா பிறந்தநாள் மலர் வெளியீட்டு விழாவில் ''சின்னம்மா கோஷம்''

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பிறந்த நாள் மலரை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட, பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவிலும் கட்சியினர் ''அம்மா''வை மறந்து ''சின்னம்மா வாழ்க'' என்று கோஷம் எழுப்பினர்.

TOI Contributor 24 Feb 2017, 10:59 am
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பிறந்த நாள் மலரை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட, பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவிலும் கட்சியினர் ''அம்மா''வை மறந்து ''சின்னம்மா வாழ்க'' என்று கோஷம் எழுப்பினர்.
Samayam Tamil aiadmk cadres raised chinnama kosham on jayalalithaas birth day special book release
ஜெயலலிதா பிறந்தநாள் மலர் வெளியீட்டு விழாவில் ''சின்னம்மா கோஷம்''

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் இன்னும் சந்தேகம் தீர்க்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பான பொது நல வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கிற்கு நேற்று பதில் அளித்திருந்த அப்போலோ மருத்துவமனையும், தமிழக அரசும் ஒரே மாதிரியான பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவகத்தில் நடந்த விழாவில் ஜெயலலிதா பிறந்த நாள் மலரை கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக் கொண்டார்.

கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவினார். அப்போது, ஜெயலலிதாவின் பெயரை உச்சரிக்க மறந்து, அங்கு இருந்த அதிமுகவினர் ''சின்னம்மா வாழ்க'' என்று கோஷம் எழுப்பியது முகம் சுளிக்க வைத்தது. ''சிறையில் இருப்பவரை ஏன் இவர்கள் வாழ்த்துகின்றனர். யாருக்கு இன்று பிறந்த நாள்'' என்று அங்கு இருந்த ஜெயலலிதா விசுவாசிகளும் கேட்கத் தவறவில்லை.

AIADMK cadres raised ''Chinnama Kosham'' on Jayalalithaa's birth day special book release

அடுத்த செய்தி