ஆப்நகரம்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு- என்னென்ன விவாதிக்கப்படும்?

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூன் 13ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 9 Jun 2023, 11:38 am
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஜூன் 13ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil eps in aiadmk office


மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் 17ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒரு மாத காலத்திற்குள் மீண்டும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்துவது ஏன் என்று விசாரித்தோம்.
சென்னையில் ரயில் விபத்து: தண்டவாளத்திலிருந்து இறங்கிய ஜன் சதாப்ஜி எக்ஸ்பிரஸ்
அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். அது தொடர்பான பணிகள் எந்த அளவில் இருக்கின்றன என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்கிறார்கள்.
அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை: தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
அண்மையில் டிடிவி தினகரனும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ள நிலையில் தென் மண்டலத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பேசப்படும் என்கிறார்கள்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி