ஆப்நகரம்

மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு: தள்ளுபடி செய்ய எடப்பாடி பழனிசாமி மனு!

மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 16 Mar 2023, 2:04 pm
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக மனோஜ் பாண்டியன் தொடர்ந்த உரிமையியல் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil edappadi palanisamy


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர்களை நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
இந்த மனுவை கடந்த மார்ச் 3ஆம் தேதி விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, எதிர்த் தரப்பு வாதங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறியதுடன் இந்த மனு தொடர்பாக மார்ச் 17ஆம் தேதிக்குள் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு உத்தரவிட்டார்.
பேசுவதற்கு நிறைய இருக்கிறது, ஆனால்.. - மன வேதனையை வெளிப்படுத்திய திருச்சி சிவா
அதன்படி இன்று (மார்ச் 16) சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்குப் பின் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு செல்லாததாகிவிட்டது. எனவே இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி