ஆப்நகரம்

கம்பெனிகள் பதிவு துறை தொடர்ந்த வழக்கு : தப்பிய முன்னாள் அதிமுக எம்.பி.யின் தலை!

தனது நிறுவனம் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததாக கூறி தொடரப்பட்ட வழக்கிலிருந்து, அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியை விடுதலை செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்ற தீர்ப்பளித்துள்ளது.

Samayam Tamil 18 Sep 2019, 5:22 pm
கோவையை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., கே.சி.பழனிச்சாமி, சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த, சேரன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, 2004 – 05ம் ஆண்டில் பதவி வகித்தார். அப்போது, அந்த நிறுவனத்தில் கம்பெனிகள் பதிவு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Samayam Tamil kpc


அதில், நிறுவனத்தை பதிவு செய்தது தொடர்பான எந்த ஆவணங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என, அதிகாரிகள் குறிப்பிட்டு சென்றனர். மேலும், நிறுவனம் தொடர்பான உரிய ஆவணங்களை நுங்கம்பாக்கத்தில் உள்ள கம்பெனிகள் பதிவாளர் முன் சமர்ப்பிக்கவும் அப்போது அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

ஆனால், பழனிசாமி உரிய ஆவணங்களை, பதிவாளர் முன் தாக்கல் செய்யவில்லை. இதனால், பழனிசாமிக்கு எதிராக, கம்பெனி பதிளாவர் சார்பில், பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேர்வு எழுதியது ஒருவர், கல்லூரியில் சேர்ந்தது வேறொருவர்!

இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி டி.லிங்கேஷ்வரன் இன்று கே.சி.பழனிச்சாமியை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

கே.சி.பழனிச்சாமி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் பொழுது அவர் அந்த நிறுவனத்தின் இயக்குனராக இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டிற்கு முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளை அழிவுப்பாதைக்கு எடுத்துச் செல்லும் கல்வித்துறை- ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தி!

அரசுப் பள்ளிகளை அழிவுப்பாதைக்கு எடுத்துச் செல்லும் கல்வித்துறை- ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தி!


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.பழனிச்சாமியின் வழக்கறிஞர் தியாகேஸ்வரன், கே.சி.பழனிச்சாமி மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

2005 ஆம் ஆண்டே இயக்குநர் பதவியில் இருந்து விலகிய அவர் மீது 2012 ஆம் ஆண்டு குற்றச்சாட்டு பதிவு செய்தது செல்லாது என நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி