ஆப்நகரம்

“அதிமுக உட்கட்சி மோதலால் தமிழகத்திற்கு வெட்கக்கேடு” : மு.க.ஸ்டாலின் கருத்து!

“அதிமுக உட்கட்சி மோதலால் தமிழகத்திற்கு வெட்கக்கேடு” : மு.க.ஸ்டாலின் கருத்து!

TNN 20 Apr 2017, 5:48 pm
சென்னை : அதிமுக கட்சி இரண்டாக பிரிந்து சண்டையிட்டு கொள்வது தமிழகத்திற்கு வெட்கக்கேடானது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதிலும், ஆட்சிக்கு வருவதிலும் தான் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil aiadmk factions have brought shame on tamil nadu stalin says
“அதிமுக உட்கட்சி மோதலால் தமிழகத்திற்கு வெட்கக்கேடு” : மு.க.ஸ்டாலின் கருத்து!


அதிமுகவின் இரண்டு பிரிவுகளும், அதிமுக அம்மா மற்றும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா ஆகிய இரண்டு அணிகளும் தினம் புதுப்புது நாடகங்களை அரங்கேற்றி வருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். ஊழலில் திளைத்த இரண்டு அணியினரும் தங்களை புனிதர்கள் போல் காட்டிக்கொள்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிச்சாமியும் மற்ற அமைச்சர்களும் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் புகழ் பாடி வந்தனர். ஆனால் இன்று இருவரையும் கட்சியை விட்டு விலக்கிவைப்பதாக கூறுகின்றனர்.

சமீபத்தில் நடந்த வருமானவரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்கள் யாருடைய பெயர் எல்லாம் இருக்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்ததை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட பின்னரும் வரிமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை முதல் தகவல் அறிக்கை பதியாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு ஆளும் அதிமுகவை மிரட்டி தன் கைக்குள் கொண்டுவருவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி