ஆப்நகரம்

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் செயல்படும் திமுக: பண்ருட்டி ராமச்சந்திரன்

நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகரின் முடிவு இறுதியானது என்று அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

TNN 22 Feb 2017, 12:11 pm
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகரின் முடிவு இறுதியானது என்று அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil aiadmk leader s ramachandran said it was not possible to postpone the floor test
ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் செயல்படும் திமுக: பண்ருட்டி ராமச்சந்திரன்


சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு, எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைப்பது சாத்தியமில்லை என்றும், சபாநாயகரின் முடிவே இறுதியானது என்றும் கூறினார். சட்டமன்றத்தில் திமுகவினரின் செயல்பாடு வன்முறைக்கு நிகராக அமைந்தமையால், அவையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதே திமுகவின் குறிக்கோள் என்றும், ரகசிய வாக்கெடுப்பு கோருவது கட்சி தாவல் சட்டத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்தார். ரகசிய வாக்கெடுப்பு சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த வாக்காளர்களை ஏமாற்றும் செயலும் கூட என்று குற்றம்சாட்டியுள்ளார். வெளிநடப்பு செய்வதுதான் திமுகவுக்கு கைவந்த கலையாகி விட்டதே? என்றும் கூறினார். சபாநாயகர் முடிவுகளில் ஆளுநரோ, மத்திய அரசோ தலையிட முடியாது என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Aiadmk leader S Ramachandran said it was not possible to postpone the floor test as demanded by the opposition and that the speaker's decision was final.

அடுத்த செய்தி