ஆப்நகரம்

பதினாறு வயதும் பதராகும் பொழுதும் - ரஜினி, கமலை விளாசிய ”நமது அம்மா”

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’வில் கடுமையான விமர்சிக்கப்பட்டு உள்ளது.

Samayam Tamil 21 Nov 2019, 10:37 am
தமிழகத்தின் நலனிற்காக ரஜினியும், கமலும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். இது கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த தமிழகத்திலும் பேசுபொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் ரஜினி - கமல் இணைவை அதிமுக கடுமையாக விமர்சித்து வருகிறது.
Samayam Tamil Rajini Kamal


இதனால் தங்கள் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அவர்கள் இணைந்தாலும் அவர்களது ரசிகர்கள் இணைய மாட்டார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்திற்கு அதிமுகவின் “நமது அம்மா” இப்படியொரு பதிலடி!

இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் ‘பதினாறு வயதும் பதராகும் பொழுதும்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சினிமாவில் ரஜினியோடு போட்டி போட்டு தோற்றுவிட்டவர் கமல்.

எனவே அரசியலில் தன்னை ரஜினியோடு இணைத்துக் கொண்டு, அவரது தனிச்செல்வாக்கை மறைத்துவிட கமல் நரிக்கணக்கு போடுகிறார். இதற்கு ரஜினியும் வலியச் சென்று பலிகடா ஆவேன் என்பது தான் பரிதாபம்.

இப்படி செய்தால் பலம் தெரிந்துவிடும்- கூட்டணி கட்சிகளுக்கு ’ஷாக்’ கொடுத்த ராஜேந்திர பாலாஜி!

ஆன்மீக அரசியல் தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக ரஜினி அறிவித்துள்ளார். இதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பவர் கமல்.

இவர்கள் இருவரும் கைகோர்ப்பது எலியும், பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறேன் என்பதற்குச் சமம். இது வெந்த நெல்லை முளைக்க வைக்க முயலும் கோமாளி காரியம் என்பதை ரஜினிக்கு காலம் தான் கற்பிக்கப் போகிறது.

என்னது... மக்கள் நீதி மய்யத்தில் ரஜினியா? -கடுப்பான கமல்

ரஜினியின் கதாநாயகன் பீடத்தை கமல் தகர்த்தெறிய நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்பை ரஜினியே சென்று வழங்குகிறார் என்றால் சும்மாவா விடுவார் உத்தமவில்லன்.

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் சீடர் கமலிடம் இருந்து ரஜினி பெறப் போகும் பாடம் ஆறாத காயம். மாறாத தழும்பு என்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி