ஆப்நகரம்

கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் அணி? மீண்டும் இரட்டை இலைக்கு சிக்கலா?

கர்நாடக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து எடியூரப்பாவிடம் ஓபிஎஸ் தரப்பு கடிதம் வழங்கியுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 7 Apr 2023, 11:57 am
பெங்களூருவில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி சந்தித்து பேசியுள்ளார்.
Samayam Tamil ops two leaves


கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. அங்கு பாஜக கூட்டணியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஓரிரு தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பில் எடியூரப்பாவிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் எம்ஜிஆர் காலம் தொட்டே அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வருகின்றனர். சிலமுறை வெற்றியும் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் நிலையில் கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் அதிமுக வேட்பாளரை களமிறக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் விவாதிக்கப்பட்டது.
ஆளுநருக்கு சவால் விட்ட உதயநிதி: அங்க வந்து பாருங்க.. அப்ப தெரியும்!
இது தொடர்பாக செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை அறிய அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த சூழலில் ஓபிஎஸ் தரப்பும் கர்நாடக தேர்தல் விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள போதும், பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டு அதற்கான விசாரணைகள் நடந்து வருவதால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓ.பன்னீர் செல்வம் உரிமை கோரி வருகிறார்.

இந்த சூழலில் கர்நாடக தேர்தல் பணியாற்ற நிர்வாகிகளையும் நியமித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், தனது ஆதரவாளரான புகழேந்தியை பெங்களூரு அனுப்பி எடியூரப்பாவை சந்திக்க செய்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.
தீர்மானத்தை கிடப்பில் போடுவது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவி ஓப்பன் டாக்!
ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தரப்பும் ஒரே நேரத்தில் கர்நாடக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கும் நிலையில் பாஜக என்ன முடிவெடுக்கப்போகிறது, யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வரும் ஓ.பன்னீர் செல்வம் இரட்டை இலையை கேட்டால் சின்னம் முடங்க வாய்ப்பு உள்ளதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு இப்படியான சர்ச்சை கிளம்பிய நிலையில் கர்நாடக தேர்தலை முன்னிட்டும் அதிமுகவுக்குள் மல்லுகட்டு தொடங்கும் சூழல் இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை நடைபெற உள்ள நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இந்த விவகாரம் அடுத்தகட்டமாக பயணிக்கும் பாதையை காட்டும் எனலாம்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி