ஆப்நகரம்

இரட்டை இலை சின்னம் இல்லாமல் அதிமுக-வின் 46வது ஆண்டு விழா.!

அதிமுக கட்சியின் 46வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கும், ஜெயலலிதா உருவப்படத்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

TNN 17 Oct 2017, 12:33 pm
அதிமுக கட்சியின் 46வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கும், ஜெயலலிதா உருவப்படத்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
Samayam Tamil aiadmk party 46th year anniversary
இரட்டை இலை சின்னம் இல்லாமல் அதிமுக-வின் 46வது ஆண்டு விழா.!


முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கி, 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, 46வது ஆண்டு தொடக்கவிழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், ஜெயலலிதாவின் சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்களும் பங்கேற்றனர்.

ஜெயலலிதா இருந்தவரை அதிமுக தொடக்க நாள் விழாவின்போது, விழா மலர் வெளியிடுவது வழக்கமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு விழா மலர் வெளியிடப்படவில்லை. அதேபோல், இரட்டை இலை சின்னம் இல்லாமலும் இந்த ஆண்டு அதிமுக தொடக்க விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

AIADMK Party 46TH year anniversary.

அடுத்த செய்தி