ஆப்நகரம்

அதிமுக அவைத்தலைவர் பொறுப்பு: மதுசூதனன் நீக்கம்; செங்கோட்டையன் நியமனம்!!

''என்னை நீக்குவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது'' என்று அந்தக் கட்சின் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 10 Feb 2017, 2:25 pm
''என்னை நீக்குவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது'' என்று அந்தக் கட்சின் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil aiadmk presiding chairman e madhusudanan out former minister and senior leader k a sengottaiyan in
அதிமுக அவைத்தலைவர் பொறுப்பு: மதுசூதனன் நீக்கம்; செங்கோட்டையன் நியமனம்!!


அதிமுக தற்போது இரண்டாக உடைந்து பெரிய விரிச்சலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கட்சியை யார் தக்க வைத்துக் கொள்வது என்ற ரீதியில் தற்போது இந்தப் பிளவு சென்று கொண்டு இருக்கிறது.

முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு நேற்று அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் ஆதரவு தெரிவித்தார். இவரது ஆதரவு பலம் நிறைந்ததாக பார்க்கப்பட்டது. இவர் சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்ற போதும், இவர் அவைத் தலைவராக இருப்பதால், இவரை சசிகலாவால் நீக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவைத் தலைவர் பொறுப்பில் மட்டுமின்றி, கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். தற்போது, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளித்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மதுசூதனன் கூறுகையில், ''என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. யாருக்கும் தகுதியும் இல்லை. இந்த இயக்கத்திற்காக நான் சிறை சாலை சென்றவன்'' என்று தெரிவித்தார்.

அதிமுகவில் அவைத் தலைவர் பொறுப்பு என்பது முக்கியமானது. எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும், உயர் மட்டத்திற்கு அல்லது கட்சி சார்பில் அறிவிக்க வேண்டுமானாலும் அவைத் தலைவர் வழியாகத்தான் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

AIADMK presiding chairman E Madhusudanan out; Former minister and senior leader K A Sengottaiyan in

அடுத்த செய்தி