ஆப்நகரம்

ஈபிஎஸ் அணியின் இரட்டை இலை மீட்புப் பயணம்!

இரட்டை இலை சின்னத்தை மீட்க தலைமை தேர்தல் ஆணையம் செல்ல அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர்.

TNN 18 Sep 2017, 9:51 am
இரட்டை இலை சின்னத்தை மீட்க தலைமை தேர்தல் ஆணையம் செல்ல அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர்.
Samayam Tamil aiadmk symbol issue eps team goes to delhi
ஈபிஎஸ் அணியின் இரட்டை இலை மீட்புப் பயணம்!


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை தலைமை தேர்தல் ஆணையம் முடக்கியது. மேலும், அதிமுக என்ற கட்சிப்பெயரை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டது.

அப்போது, இரண்டு அணிகளாக இருந்த ஒபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இப்போது கூடுவிட்டன. எனவே, இரட்டை இலை சின்னத்தை மீட்க நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இரட்டை இலை யாருக்கு என்று முடிவு அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இச்சூழலில் இரட்டை இலையை மீட்கும் நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணையத்துடன் பேச, அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். இன்று அல்லது நாளை அவர்கள் தேர்தல் ஆணையத்திற்குச் சென்று பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமர்ப்பிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

தற்காலிக பொதுசெயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவின் நியமனம் ரத்து உள்ளிட்டவற்றை முன்வைத்து இரட்டை இலையை தங்களுக்கு ஒதுக்க கோரிக்கை வைக்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி