ஆப்நகரம்

முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான். ஓ.பி.எஸ். அறிவிப்பு

முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கவிருக்கிறது அதிமுக. தொடர் அறிவிப்புகளையும் நிகழ்வுகளையும் நேரலையில் அறிந்து கொள்ளுங்கள்....

Samayam Tamil 7 Oct 2020, 10:47 am
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அதிமுக தலைமைக் கழகம் இன்று அறிவிப்பு வெளியிட உள்ளது. இந்நிலையில், நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகள் தலைவர்களின் கருத்துகள் ஆகியவற்றை இங்கு நேரலையாகப் பார்த்தோம்..
Samayam Tamil eps ops


இன்று காலை 10 மணியளவில் அறிவிப்பு வெளியானது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

Live Updates:

* துணை முதல்வர் ஓ.பிஎஸ். பேசினார். முதலாவதாக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்ற 11 பேருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பனிசாமியை அறிவித்தார். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை அன்பிற்கினிய அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே எதிர்கொள்ளப்போவதாகவும் அறிவித்தார்.

* அதிமுகவில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், பா.மோகன், ர.கோபாலகிருஷ்ணன், நெமிலி மாணிக்கம் ஆகியோர் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்ப்பட்டுள்ளனர்.

* எம்.ஜி. ஆரையும், ஜெயலலிதாவையும் வணங்கி பேசத் தொடங்கினார் எடப்பாடிபழனிசாமி.

* கே.பி.முனுசாமி பேசத் தொடங்கினார். இதனையடுத்து முதலவ்ர் பேசினார்.

* முதல்வர் துணை முதல்வர் ஆகிய இருவரும் ஒன்றாக அமர்ந்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

* துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார்.

* முதல்வர் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி, கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.
* முதல்வர், துணைமுதல்வரை வரவேற்க தொண்டர்கள் சார்பில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இருவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.


* அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஏற்கனவே வந்துவிட்டனர்.

அடுத்த செய்தி