ஆப்நகரம்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார்: புதிய கூட்டணி அமைப்பு!

அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகிவிட்டதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 26 Feb 2021, 10:11 pm
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் பட்டியல் என அனைத்து கட்சிகளும் அறிவித்து வருகின்றன.
Samayam Tamil சரத்குமார்
சரத்குமார்


இந்த நிலையில், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த இரு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதற்கிடையே, மற்ற கட்சிகளை கூட்டணியில் இணைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகிவிட்டதாக சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் ஐ.ஜே.கே, ச.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாகவும் சரத்குமார் அறிவித்துள்ளார்.

முன்னதாக, சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் இணைந்து ஜெயலலிதா பிறந்தநாளன்று சசிகலாவை சந்தித்தார் என்பது கவனிக்கத்தக்கது. கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவானது. இதற்கு அடித்தளமாக இருந்தவர் வைகோ. திமுகவை தோற்கடிப்பதற்கான ஜெயலலிதாவின் வியூகத்திலேயே இக்கூட்டணி அமைந்ததாக அப்போது விமர்சிக்கப்பட்டது.

முரண் அரசியல்: புதுச்சேரியில் ட்ரைலர்; அதிமுகவை வேட்டையாடும் பாஜக!

இந்த நிலையில், சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு சரத்குமார், பாரிவேந்தர் இணைந்து தனியாக கூட்டணி அமைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

அடுத்த செய்தி