ஆப்நகரம்

இனி போக்குவரத்து விதிமீறல் செய்தால் ஆபராதம் வீட்டுக்கே வரும்..!!

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த சென்னை பெருநகர காவல்துறை புதிய டிஜிட்டல் பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.

Samayam Tamil 30 Nov 2018, 6:10 pm
போக்குவரத்து விதிகளை மீறி வாகன ஓட்டினால், அவரவர் வீடுகளுக்கே அபராத ரசீது அனுப்பும் நடவடிக்கை விரைவில் சென்னை முழுவதும் அமல்படுத்தப்படும் என பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறினார்.
Samayam Tamil 01THTRAFFIC
போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்


சென்னை புரசைவாக்கத்தில், ஆர்.சி.சி. அறக்கட்டளை சார்பாக அமைக்கப்பட்ட 384 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னையில் அனைத்து முக்கிய சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுவிட்டது. இதனால் போக்குவரத்து விதிமீறி வாகனம் ஓட்டுவோருக்கு ஆபத்து காத்திருகிறது.

போக்குவரத்து விதிகளை மீறி வாகன ஓட்டிகள் சென்றால், ஆட்டோமெடிக் நம்பர் ரெகக்னிசன் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகன எண் தெளிவாக குறிப்பிட்டுத் தரும் தொழில்நுட்பம் என்பதால், விதிகளை மீறி சாலையில் செல்வோரை ஓடிச் சென்று மடக்கிப் பிடிக்கத் தேவையில்லை.

மாறாக பதிவெண்ணில் உள்ள உரிமையாளரின் முகவரிக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அபராத ரசீதும் அனுப்பப்படும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக' தெரிவித்தார்.

முன்னதாக வணிக நிறுவனங்கள், குடியிருப்புக்கள், சாலைகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்கச் சென்னை காவல்துறை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி