ஆப்நகரம்

ரிசர்வ் வங்கி vs கூட்டுறவு வங்கிகள்: தீர்ப்புக்குப் பிறகுதான் எல்லாம்... அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி

இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடுத்து உள்ளது.

Samayam Tamil 11 Sep 2020, 9:44 am
தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையில் 126 நகரக் கூட்டுறவு சங்கங்களும், 181 கிளை கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. இந்நிலையில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களை நேரடியாக மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதாக அறிவித்தது. இது தொடர்பாக இன்று பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் இதன் மீதான கண்டன நிலைப்பாட்டில் தமிழகம் உறுதியாக இருப்பதை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sellur-raju


இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

இந்த விவகாரத்துக்கு நாம், முதலிலேயே நமது கருத்தை மத்திய வங்கிக்கு தெரிவித்து விட்டோம். அதுபோக, அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் கூட்டுறவு சங்கங்களில் சாதாரணமானவர்கள் உறுப்பினர்களாக முடியாது.

விவசாயத் துறையை எடுத்துக்கொண்டால் அதில் பட்டம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். மேலாளராக வரவேண்டுமானால் அதற்கான கல்வித் தகுதி வேண்டும் என்பதால் அந்த சட்டத்தை கொண்டு வர முயன்றார்கள்.

நாம் அதற்கு முழுமையாக கண்டனத்தை தெரிவித்த நிலையில் 115 ஆண்டுகளான காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி நாமக்கல் நகர கூட்டுறவு வங்கியும் நீதிமன்றத்திற்கு சென்று உள்ளார்கள்.

அமமுக அதிமுக கூட்டணி இணையுமா? அடுத்த வெடியை பற்ற வைத்த செல்லூர் ராஜு

இந்த சட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்ற கருத்தை நாம் பதிவு செய்த வேலையில் கொரோனா பாதிப்பு காரணமாக நாடாளுமன்றம் கூடாத நிலையில் தற்சமயம் இந்த சட்டம் அமல்படுத்த படாமல் இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் தமிழகம் தமிழகம் மட்டும்தான் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடுத்து உள்ளது. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்பதை செயல்படுத்த வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி