ஆப்நகரம்

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின், சீமான், வைகோ பங்கேற்பு!!

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஸ்டாலின், சீமான், வைகோ உள்ளிட்ட 30 கட்சித்தலைவர்கள், 14 விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Samayam Tamil 22 Feb 2018, 11:39 am
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஸ்டாலின், சீமான், வைகோ உள்ளிட்ட 30 கட்சித்தலைவர்கள், 14 விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil all party meeting on cauvery veridict issue organised by tamilnadu government
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின், சீமான், வைகோ பங்கேற்பு!!


காவிரி வழக்கில் தமிழகத்துக்கான நீர் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. அதேநேரத்தில் கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி கூடுதல் நீரை வழங்கியும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இதனையடுத்து இன்று அனைத்துக்கட்சி கூட்டதுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

முன்னதாக எதிர்கட்சியான திமுக 23ஆம் தேதியன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது . ஆனால் தற்பொது அதிமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதால் ஸ்டாலின் இந்த அறிவிப்பை திரும்பி பெற்றுகொண்டார்

இன்று காலை 10.30 மணிக்கு நடக்கும் இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, உச்சமன்ற தீர்ப்பு சீராய்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறது தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில், ஸ்டாலின், சீமான், வைகோ உள்ளிட்ட 30 கட்சித்தலைவர்கள், 14 விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி