ஆப்நகரம்

இலங்கை தமிழ் செய்தி தாள்களில் தலைப்பு செய்தியான ஜெயலலிதாவின் உயிரிழந்த செய்தி

இலங்கையில் வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளிலும் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்த செய்தி தலைப்பு செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

TNN 6 Dec 2016, 11:14 am
இலங்கையில் வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளிலும் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்த செய்தி தலைப்பு செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil all sri lankan tamil news paper published jayalalitha death news in headline
இலங்கை தமிழ் செய்தி தாள்களில் தலைப்பு செய்தியான ஜெயலலிதாவின் உயிரிழந்த செய்தி

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா திங்கட்கிழமை 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது.

இந்நிலையில், தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு ஆங்கில நாளிதழ்களிலும் ஜெயலலிதா காலமான செய்தி தலைப்பு செய்தியாக வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ்களான உதயன், தினக்குரல்,வலம்புரி போன்ற செய்தி தாள்களிலும் தலைப்பு செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி