ஆப்நகரம்

விஜயகாந்த் மட்டும் போதும்: காங்கிரஸ் முடிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக உடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் தேசிய செய்தித் தொடார்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

TNN 27 Feb 2016, 4:36 pm
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக உடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் தேசிய செய்தித் தொடார்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil alliance talk with only dmdk says aicc spokes person kushboo
விஜயகாந்த் மட்டும் போதும்: காங்கிரஸ் முடிவு


தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்து இறுதி கட்டப் பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

திமுக, காங்கிரஸ் கூட்டணி மற்றும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய மக்கள் நலக்கூட்டணியும் தேமுதிகவைத் தங்கள் பக்கம் இழுக்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. அதேநேரம், கூட்டணி குறித்த தனது முடிவை அறிவிக்காமல் விஜயகாந்த் மவுனம் காத்து வருகிறார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பூ, எந்தக் கட்சியுடனும் கூட்டணி என்ற நிலையில் பாஜக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், காங்கிரஸ், திமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி