ஆப்நகரம்

'அமைச்சர் ஆயிட்டோம்னு'... உதயநிதிக்கு அமர் பிரசாத் ரெட்டி எச்சரிக்கை..!

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி எச்சரித்துள்ளார்.

Samayam Tamil 14 Dec 2022, 3:29 pm
சேப்பாக்கம் - திருவ்வல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முடிவு செய்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். அதனை தொடர்ந்து, இன்று உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் முன்னிலையில் அமைச்சராக பதவியேற்றார். திமுகவின் 35 ஆவது அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil amar prasad reddy
amar prasad reddy


அதுதவிர, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்புத்திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறைகளும் உதயநிதிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. பதவியை ஏற்றுக்கொண்டு தலைமை செயலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், 2022-23ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான கபடிப் போட்டி நடத்துவதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டார். முதல்வர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்து அவர் கையெழுத்திட்டார்.

மேலும், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.3000 லிருந்து ரூ.6000 ஆக அதிகரித்து வழங்கும் கோப்பிலும் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார். துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கம் வென்ற நிவேதிதா நாயருக்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையையும் அப்போது உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி பேசியபோது, நிச்சயமாக விமர்சனங்கள் வரும், விமர்சனங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். என்னுடைய செயல்பாடுகள் அதற்கு பதிலாக இருக்கும் என்றார்.

புதிய இளம் அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து பல இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து ட்வீட் போட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி வாழ்த்தும் தெரிவிக்காமல், விமர்சனமும் செய்யாமல் எச்சரிக்கும் பாணியில் ட்வீட் போட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

எத பண்ணக்கூடாதுனு சொன்னாரோ அதை செஞ்ச காயத்ரி ரகுராம்... அண்ணாமலை கோவம்
அவர் தனது ட்வீட்டில், உதயநிதி அவர்களே, நான் அமைச்சர் ஆயிட்டேன், நான் தான் அரசாங்கம், நான் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைத்து விடக்கூடாது.
எங்களிடம் அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறது அதற்கு பெயர் தான் "அண்ணாமலை" என்று எச்சரிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். முன்னதாக பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி