ஆப்நகரம்

ஆர்.கே நகரில் ஆம்பூர் பிரியாணி முகாம்; களைகட்டும் தேர்தல் பணி!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்காக ஆம்பூரிலிருந்து 132 பிரியாணி மாஸ்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.

TNN 7 Dec 2017, 5:16 pm
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்காக ஆம்பூரிலிருந்து 132 பிரியாணி மாஸ்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.
Samayam Tamil ambur biryani masters came to rk nagar by poll election
ஆர்.கே நகரில் ஆம்பூர் பிரியாணி முகாம்; களைகட்டும் தேர்தல் பணி!


ஆர்.கே நகரில் வரும் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து, அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பிலும் தேர்தல் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு முன்பு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடைபெறவிருந்த சூழ்நிலையில், ஆம்பூரிலிருந்து சமையல்காரர்கள் வரவழைக்கப்பட்டு பிரியாணி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, ஆம்பூரிலிருந்து பிரியாணி மாஸ்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஆம்பூர் பிரியாணி அசோசிஷன் தலைவர் அப்துல் ரஹீம் கூறுகையில் , ஆம்பூரில் மொத்தம் 234 பிரியாணி மாஸ்டர்கள் இருப்பதாகவும், தற்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்காகவும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசியில் கட்சியினர்களுக்காகவும், ஆம்பூரிலிருந்து 132 பிரியாணி மாஸ்டர்கள் ஆர்.கே நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரியாணி மாஸ்டர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்காகவும், காய்கறிகள், வெங்காயம் வெட்டுவதற்காக மட்டும், 200 உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவர்களுக்கு , நாள் ஒன்றிற்கு 1,500 ரூபாய் முதல் 3,000 வரையில் சன்மானம் வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி