ஆப்நகரம்

அமெரிக்காவில் தமிழ் கலாச்சாரத்தை பயன்படுத்தி தமிழக விவசாயிகளுக்கு உதவ மொய்விருந்து

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

TOI Contributor 26 Jul 2017, 5:58 pm
தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் பழமையான தமிழ் கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர் அமெரிக்க வாழ் தமிழர்கள்.
Samayam Tamil america tamils organising moi virunthu for help to tamil nadu farmers
அமெரிக்காவில் தமிழ் கலாச்சாரத்தை பயன்படுத்தி தமிழக விவசாயிகளுக்கு உதவ மொய்விருந்து


ஆம், கதிராமங்கலம் போராட்டம், விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு உதவும் வண்ணம் அமெரிக்க வாழ் தமிழகர்கள் மொய் விருந்து என்ற தமிழர்களின் பண்டைகால வழக்கத்தை கையில் எடுத்துள்ளனர்.



இந்த நிகழ்வு வரும் 29ம் தேதி வாஷிங்டன் சாண்ட்லி (CHANTILLY) பகுதியில் உள்ள ஃப்ரீடம் உயர்நிலைப் பள்ளியில் (Freedom High School) நடைப்பெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை எய்ம்ஸ் அமைப்பு, வாஷிங்டன் தமிழ் சங்கம், தமிழ் பள்ளிகள் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளனர்.இதுதொடர்பான கூடுதல் தகவல்களை dcmoivirunthu.org என்ற இணையதளத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி