ஆப்நகரம்

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த மக்கள்!

கட்டி முடித்தும் திறக்கப்படாமல் இருந்த போரூர் பாலத்தை பொதுமக்களை திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

TNN 22 Jun 2017, 12:54 pm
கட்டி முடித்தும் திறக்கப்படாமல் இருந்த போரூர் பாலத்தை பொதுமக்களை திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil amid showers motorists use porur flyover ahead of launch
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த மக்கள்!


கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போரூர் சந்திப்பில் பாலம் அமைக்க திமுக ஆட்சியின் போது கடந்த 2010ம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டது. ரூ.34 கோடி செலவில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்தது. இந்நிலையில், கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், பாலம் இன்னும் திறக்கப்படாமலேயே இருந்துள்ளது. நேற்று போரூர் உள்பட சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.



இதன் காரணமாக போரூர் சிகனல் மற்றும் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் அருகிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. கட்டிமுடிக்கப்பட்ட பாலத்திற்கான திறப்பு விழா நடைபெறாததால், பாலத்தில் வாகனங்கள் சென்றுவிடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். இந்நிலையில், கடும் நெரிசலில் சிக்கித் தவித்த பொதுமக்கள், கம்பீரம் படத்தைப் போன்று அந்த தடுப்புகளை அகற்றி பாலத்தை திறந்தனர். இதில் பாலத்தில் கிண்டி நோக்கி செல்லும் பாதை திறக்கப்பட்டது.



நேற்றிரவு 7 மணிக்கு திறக்கப்பட்ட இந்த பாலத்தில் 9 மணிவரை மட்டுமே வாகனங்கள் அணிவகுத்தபடி சென்றன. அதன் பிறகு தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று அவசரம் அவசரமாக தடுப்புகளை அமைத்து பாலத்தை மூடிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி