ஆப்நகரம்

எங்களுக்கு வேற வழி தெரியலை: டிடிவி தினகரன் ஓப்பன் டாக்!

அமமுக ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவில் டிடிவி தினகரன் கட்சி தொடங்கிய காரணத்தை குறிப்பிட்டு பேசினார்.

Samayam Tamil 16 Mar 2022, 7:21 am
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைசென்ற போது டிடிவி தினகரனை அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக்கிவிட்டு சென்றார். அதன் பின்னர் அரசியல் அரங்கில் பல்வேறு அதிரடியான சம்பவங்கள் நடந்தேறின. இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற புகார் எழுந்து தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
Samayam Tamil ttv dhinakaran


இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸோடு ராசியாகி தினகரன், சசிகலாவை கட்சியைவிட்டு தூக்கினார். தினகரன் பின்னால் கணிசமான எம்.எல்.ஏக்கள் சென்றதால் ஆட்சியை பாதுகாக்கவே எடப்பாடி பழனிசாமி அல்லோகலப்பட்டார்.

சசிகலா ஆதரவாளர்களை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். தென் மாவட்டங்களில் வலுவான அடித்தளம் உருவானதால் பெரியளவில் வெற்றி பெறாவிட்டாலும் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை பெற்றார் . இதற்கிடையே அவருக்கு நெருக்கமானவர்கள் சிலரே திமுகவில் தஞ்சமடைந்தாலும் அமமுகவை வலுப்படுத்தும் முயற்சியில் உறுதியாக நின்றுவிட்டார் தினகரன்
கிலோ கணக்கில் தங்கம்.. கட்டு கட்டாக பணம்: வேலுமணி வீட்டில் சிக்கியவை இதுதான்!
தற்போதைய சூழலில் டிடிவி தினகரனுக்கும் சசிகலாவும் மன வருத்தம் நிலவுவதாக கூறப்பட்டாலும், கட்சியை கலைத்துவிடு என சசிகலா கூறியதாக ஒரு தகவல் வந்த போதும் தினகரன் கட்சியை விடுவதாக இல்லை.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை மாவட்டம் மேலூரில் அமமுகவை தொடங்கினார் தினகரன். அமமுக தொடங்கி 4 ஆண்டுகள் முடிவு பெற்றதையடுத்து 5ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கட்சி கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கினார்.
சீக்ரெட்டா முடிங்க: உளவுத் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு?
பின்னர், கட்சி அலுவலகத்தில் உள்ள பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “வெற்றி, தோல்விகளை சமமான மனநிலையோடு அணுக வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எங்களுக்கு நல்லதொரு தொடக்கமாக அமைந்துள்ளது. அரசியல் என்பது போர்க்களம். யாரும் கட்சியை விட்டு சென்றுவிட்டார்கள் என்பதற்காக நான் வருத்தப்பட்டது கிடையாது. அடுத்தவர்களை நம்பி நான் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஒருவேளை அதிமுகவுடன் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களின் விருப்பப்படி செயல்படுவேன். அமமுகவை நான் விரும்பி ஆரம்பிக்கவில்லை. வேறு வழியில்லாமல் தான் கட்சியை ஆரம்பித்து அதிமுகவை எதிர்த்தோம்” என்று கூறினார்.

அடுத்த செய்தி