ஆப்நகரம்

ரேஷன் அட்டைகளுக்கு ஜாக்பாட்: வெளியான சூப்பர் அறிவிப்பு!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக ஐந்து கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது.

Samayam Tamil 3 Jun 2021, 12:52 pm
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
Samayam Tamil free rations


ஊரடங்கால் பாதிப்பு குறைந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு மே மாதம் 2000 ரூபாய் நிவாரண நிதி வழங்கியது. தற்போது ஜூன் மாதத்துக்கும் 2000 வழங்குவதுடன் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த கட்ட ஊடரங்கு? எவற்றுக்கெல்லாம் அனுமதி?
இந்நிலையில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஏற்கனவே வழங்குவதுடன் கூடுதலாக தலா 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கூடுதல் அரிசி நாளை மறுதினம் ஜூன் 5ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
ஆமா, நான் ‘செயல்’தான்: ஸ்டாலின் வேகத்துக்கு இதுதான் காரணம்!
இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு உணவு வழங்கல் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கலைஞர் திராவிட இயக்க போராளியா, அரசியல்வாதியா?

அந்த அறிக்கையில், “பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை, முன்னுரிமையற்ற அட்டைதாரர்களில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும், ஒருவருக்கு, 5 கிலோ வீதம், மே, ஜூன் இரு மாதங்களுக்கு, கூடுதல் அரிசியை இலவசமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரிசி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மே மாதம் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசி, ஜூலை மாதத்திற்கு வழங்கப்படும் அரிசியுடன் சேர்த்தும்; ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீடு, ஜூன் மாத ஒதுக்கீட்டுடன் சேர்த்தும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி