ஆப்நகரம்

மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்!

கல்விக் கடன் ரத்து தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் பேசியுள்ளார்.

Samayam Tamil 20 Oct 2021, 12:55 pm
சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கை பரபரப்பாக பேசப்பட்டது. அனைத்து மக்களையும் ஈர்க்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.
Samayam Tamil tn education loan waiver


மக்களிடம் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் திமுகவும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் ஆகியவற்றையும் அறிவித்தார்.

அதன்பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தியது. இதற்கிடையே தமிழக அரசின் நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இதனால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

சசிகலா வைக்கும் கறி விருந்து: தொண்டர்களை உற்சாகப்படுத்த செம திட்டம்!

ஆனால் வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து அரசு பெட்ரோல் விலையை மூன்று ரூபாய் குறைத்தது. கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நகைக் கடன் தள்ளுபடியை போல் கல்விக் கடன் தள்ளுபடி அறிவிப்பையும் மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். இந்த சூழலில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இலவச கல்வி - பள்ளிக் கல்வித் துறை நிதி ஒதுக்கீடு!

‘மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது’ என பிடிஆர் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி