ஆப்நகரம்

விவசாயிகளுக்கு விற்பனை கட்டணம் இல்லை: வந்தது அவசர சட்டம்!

விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை செய்யும் போது கட்டணம் வசூலிக்காத வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Jun 2020, 12:28 pm
விவசாயிகள் தங்களை விளைபொருள்களை எளிதாகவும், லாபகரமாகவும் விற்பனை செய்ய பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
Samayam Tamil agricultural produce marketing act


தற்போது வேளாண் விளைபொருள்கள் விற்பனைச் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்து அவசர சட்டம் ஒன்றை ஆளுநரின் ஒப்புதலுடன் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

அதன்படி வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப, தமிழகத்தில் உள்ள எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் குளிர்பதன மையங்களிலும் விற்பனை செய்வதற்கும், விவசாயிகள் விளைபொருட்களை தங்கள் பண்ணையிலோ அல்லது உணவுப் பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடி வெட்டப் போறீங்களா, ஆதார் எடுத்துட்டு போங்க!

மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும் பொழுது அவர்களிடமிருந்து விற்பனைக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்றும் இந்த அவசரச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா: உச்சத்தை நெருங்குகிறதா தமிழகம்?

விற்பனைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தினை மே 29க்கு பின்னர், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி