ஆப்நகரம்

மாணவர் சேர்க்கை அதிகரிக்க என்ன காரணம்? ஆசிரியர்கள் கோரிக்கை என்னாச்சு? அமைச்சர் அளித்த பதில்!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 2 Jun 2023, 3:15 pm
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களால் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil anbil mahesh poyyamozhi


தஞ்சாவூரில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

பள்ளிகள் திறக்க முன்னேற்பாடு!

அப்போது பேசிய அவர், “ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே பள்ளிகளை சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளி வாகனங்கள் நல்ல முறையில் இயங்குகிறதா? எனவும் அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

ஜூன் 7இல் காத்திருக்கும் சம்பவம்: உற்று நோக்கும் எடப்பாடி - மாறும் அரசியல் வானிலை!

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!

மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற முழு விவரம் தெரியவரும்.

முதலமைச்சரின் வானவில் மன்றம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்: ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாமா? தமிழக அரசின் திட்டம் என்ன?

ஆசிரியர்களின் கோரிக்கைகள் என்னாச்சு?

வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு தகுந்தாற்போல் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி