ஆப்நகரம்

மா.செ. ஆகப்போகும் அன்பில் மகேஷ்... உபயம் உதயநிதியா?

உதயநிதி ஸ்டாலினின் பக்கதுணையாக இருந்து வரும் நண்பர் அன்பில் மகேஷுக்கு உதயநிதி பரிந்துரையால் கிடைக்கவிருக்கும் பரிசா இந்த பதவி என்று ​​அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Samayam Tamil 22 Jan 2020, 10:03 pm
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி தனக்கு உள்ளாட்சித் தேர்தலிலும் ஒர்க் அவுட் ஆகும் என்ற திமுகவின் கணக்கு சிதறிப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அபரிமிதமான வெற்றிகிடைக்கும் என்று நம்பியிருந்த இடத்தில் கூட, அடித்துப்பிடித்துத்தான் வென்றிருக்கிறது திமுக.
Samayam Tamil anbil magesh


இந்நிலையில் அவசர அவசரமாக கூட்டப்பட்ட செயற்குழு கூட்டத்தில், காலை தொடங்கியது முதலே மைக்கைக் கையில் எடுத்த ஸ்டாலின்,தேர்தல் வெற்றி குறித்து தொண்டர்களுக்கு பாரட்டு மழை பொழிந்தார். முடிந்த பிறகு மாவட்ட பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகளை வறுத்தெடுக்கத் தொடங்கியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் சறுக்கல்களுக்கு காரணமான, நிர்வாகிகளை கடுமையாகப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது மாநில இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கக்கூடிய அன்பில் பொய்யா மொழி மகேஷ், திமுகவில் உதயநிதியின் சர்வ பக்க பலமாக தற்போது இருந்து வருகிறார்.

அவரது பயணத் திட்டங்களை வகுக்கக்கூடியவராகவும் இருந்து வருகிறார். திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதியை உயர்த்துவதற்காகப் பல உதவிகளை உதயநிதிக்குச் செய்தவர் இந்த மகேஷ்.

திமுக ஆட்சிக்கு வந்ததே எம்ஜிஆரால்தான்: ராஜேந்திர பாலாஜி பெருமிதம்!

முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் வழி வந்த அன்பில் பொய்யாமொழியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது திருவெறும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருக்கும் அன்பில் மகேஷுக்கு விரைவில் மாவட்டச்செயலாளர் பதவி கொடுக்க இருக்கிறார். திருச்சி பகுதியில் எந்த பகுதி மாவட்டத்திற்காவது அவர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரப்போகிறது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உதயநிதி ஸ்டாலினின் பக்கதுணையாக இருந்து வரும் நண்பர் அன்பில் மகேஷுக்கு உதயநிதி பரிந்துரையால் கிடைக்கவிருக்கும் பரிசா இந்த பதவி என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி