ஆப்நகரம்

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் அன்புமணி ராமதாஸ்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் நிலவேம்பு கசாயத்தை அன்புமணி ராமதாஸ் அளிக்க உள்ளார்.

TNN 4 Aug 2017, 11:47 am
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், காய்ச்சலைக்
Samayam Tamil anbumani ramadoss decided to distribute nilavempu kasaayam all over the district
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் அன்புமணி ராமதாஸ்

கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் நிலவேம்பு கசாயத்தை அன்புமணி ராமதாஸ் அளிக்க உள்ளார்.

அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெங்கு காய்ச்சலை உடனடியாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் , அதை பரவாமல் தடுக்கவும் , குறைந்தது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு சாறு ஆகியவற்றை காய்ச்சி குடிப்பது மற்றும் நிலவேம்பு கசாயத்தை குடிப்பதன் மூலமும் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் . இதற்கெல்லாம் மேலாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது முக்கியமாகும்.

இந்த ஆண்டும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் நிலவேம்பு கசாயம் மக்களுக்கு வழங்கப்படும் .

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

anbumani ramadoss decided to distribute nilavempu kasaayam all over the district

அடுத்த செய்தி