ஆப்நகரம்

காவிரி பிரச்னை: ராஜினாமா செய்ய அன்புமணி ரெடி

காவிரி பிரச்னைக்காக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்ற பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Mar 2018, 12:18 pm
காவிரி பிரச்னைக்காக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்ற பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil anbumani set to resign as lok sabha mp over cauvery issue
காவிரி பிரச்னை: ராஜினாமா செய்ய அன்புமணி ரெடி


கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி பேசியதாவது,

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தடுக்க சூழ்ச்சி நடக்கிறது. கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க முயலும் பாஜக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதிக்கிறது. மார்ச் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் 30ஆம் தேதிக்கு பின் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். இதில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைவரும் பங்கேற்பார்கள்.

மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதுதான் அரசியல் சாசன நெருக்கடி ஏற்படும்.

ஸ்டாலின் சொல்வது போல் சட்டப்பேரவையைக் கூட்டினால் எதுவும் நடக்காது. காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக அனைத்து கட்சி தலைவர்களை மோடி சந்திக்க மறுத்தது தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய அவமானம். காவிரி பிரச்சனைக்காக முதல் நபராக எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய நான் தயார். மற்றவர்களும் ராஜினாமா செய்ய முன்வர வேண்டும்.

தமிழகத்தை சுற்றி பல மாநிலங்கள் தடுப்பணை கட்டி வருகின்றன. சிறுவாணி அணையின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து நாளை இரு மாநில எல்லையில் போராட்டம் நடத்த உள்ளேன்.

தமிழக அரசில் நடக்கும் ஊழல் பற்றி மீண்டும் ஆளுநரிடம் புகார் அளிக்க உள்ளேன். பாரதியார் பல்கலைக்கழகத்தைப்போல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. இது பற்றி நான் ஆளுநரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

அடுத்த செய்தி