ஆப்நகரம்

ஆந்திர அரசுக்கு எதிராக தடையுத்தரவு பெறவும்”- முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் பஞ்சம் இன்னும் மோசமாகும். இதனைத் தடுத்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Samayam Tamil 24 Jul 2019, 7:23 pm
ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil stalin


பாலாற்றில், ஆந்திர அரசு ஏற்கனவே 29 தடுப்பணைகள் கட்டி தமிழகத்துக்கு வரும் தண்ணீரை தடுத்துள்ளது. இந்நிலையில் இதில், 21 தடுப்பணைகளின் உயரத்தை அதிரிக்கும் பணிக்கு, ரூபாய் 43 கோடி நிதிஒதுக்கி, டெண்டர் விட்டுள்ளதாகவும், இடையில் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதில் கிடிமாணி பெண்டா அருகில் கங்குந்தி என்ற இடத்தில் கட்டப்பட்ட தடுப்பணையை, 22 அடி உயரத்திலிருந்து 40 அடியாக உயர்த்தும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

மேலும், பொகிலிரே என்ற இடத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தையும், சுமார் 40 அடிக்கு உயர்த்த பணிகள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தடுப்பணைகள் கட்டப்படுவதை எதிர்த்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இப் பணி நடைபெற்று வருகிறது.

முன்னாள் மேயர் கொலையில் துப்பு கிடைக்காமல் விழிப்பிதுங்கும் நெல்லை காவல்துறை

இதுதொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு 22 தடுப்பணைகள் கட்டும் பணிகள் மேற்கொண்டு வருவதை அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். பாலாறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற முடியாமல் தமிழக அரசு, சட்டப் போராட்டத்தில் தோல்விடைந்து விட்டதாகக் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரங்களை மோசமான பாதிப்பிற்கு உள்ளாக்கும் இந்த தடுப்பணைகள் கட்டும் பணியை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தவும், ஆந்திர மாநில அரசுக்கு எதிராக தடையுத்தரவு பெற்றிடவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி