ஆப்நகரம்

செம்மரம் வெட்ட வந்தவர்களை விரட்டிய ஆந்திர போலீசார்: 7 தமிழர்கள் படுகாயம்!

செம்மரம் வெட்ட வந்ததாக கூறி, லாரியை போலீசார் விரட்டியதில், தமிழக கூலித் தொழிலாளர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர்.

Samayam Tamil 24 Sep 2018, 1:20 pm
திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வந்ததாக கூறி, லாரியை போலீசார் விரட்டியதில், அதிலிருந்து குதித்த தமிழக கூலித் தொழிலாளர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர்.
Samayam Tamil செம்மரம் வெட்ட வந்தவர்களை விரட்டிய ஆந்திர போலீசார்: 7 தமிழர்கள் படுகாயம்!
செம்மரம் வெட்ட வந்தவர்களை விரட்டிய ஆந்திர போலீசார்: 7 தமிழர்கள் படுகாயம்!


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் சோதனை சாவடி அருகே செம்மரம் வெட்டுவதற்காக லாரியில் 80க்கும் மேற்பட்டோர் வருவதை அறிந்த போலீசார் லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதையறிந்த கடத்தல்காரர்கள், லாரியை நிறுத்தாமல் திருப்பதியை நோக்கி வேகமாக சென்றனர். காஜுலமண்டியம் என்ற இடத்தில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலியை உடைத்துவிட்டு சந்திரகிரி நோக்கி சென்றனர்.

இந்நிலையில் திருச்சானூர் போலீசார் மற்றொரு லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தியதால், கடத்தல்காரர்கள் லாரியை வேகமாக நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.

இதில் லாரியிலிருந்து குதித்த ஏழு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மீட்ட போலிசார் அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே காயமடைந்தவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி